பெங்களூரு: இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா (28) பெங்களூருவில் தங்கி விமான நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் கடந்த சனிக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்த நிலையில், அர்ச்சனாவின் தாயார் லட்சுமி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அர்ச்சனாவின் காதலர் ஆதேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த ஆதேஷ்,அர்ச்சனாவை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆதேஷை கைது செய்துள்ளனர்.