க்ரைம்

அரியலூரில் உலோக சுவாமி சிலைகளை திருடிய 7 பேருக்கு சிறை

சி.எஸ். ஆறுமுகம்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உலோக சுவாமி சிலைகளைத் திருடிய 7 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு உலோக சிலைகளை சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக வந்த தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.பாலமுருகன், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார், சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த செல்வம், மூர்த்தி, வைத்தியநாதன், மனோராஜ், விஜி, மணி, மணிகண்டகுமார், குமார் ஆகிய 8 பேரை பிடித்து அவர்களிடமிருந்த திருவாச்சியுடன் கூடிய பச்சைகாளியம்மன், விநாயகர், அம்மன் ஆகிய 3 சிலைகளை கைப்பற்றினர்.

இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, செல்வம் மற்றும் மூர்த்தி ஆகிய 2 பேருக்கும் 2 பிரிவின் கீழ் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 24 ஆயிரம் அபராதமும், மனோராஜ், விஜி, மணி, மணிகண்டகுமார், குமார் ஆகிய 5 பேருக்கும், 2 பிரிவின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதில் குற்றம்சாட்டப்பட்ட வைத்தியநாதன் விடுதலை செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT