செல்லத்துரை, கொளஞ்சி 
க்ரைம்

விருத்தாசலம் | கூடா நட்பில் இருந்த பெரியம்மா: ஆண் நண்பர் டிராக்டர் ஏற்றி கொலை

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (46).

இவரும், அதே ஊரைச் சேர்ந்த செல்லதுரை (48) என்பவரும் சிறுவயது முதல்நட்பாக பழகி வந்தனர். செல்லத்துரைக்கு திருமணமாகி இருகுழந்தைகள் உள்ள நிலையில், அவர் வேலைக்காக வெளிநாட் டிற்கு சென்றுவிட்டார்.

கொளஞ்சி சென்னை சென்றுராதாகிருஷ்ணன் என்பவருடன் பழகி அவருடன் திருமணமாகாம லேயே வாழ்ந்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ராதா கிருஷ்ணன் கரோனாவால் உயிரி ழந்ததை அடுத்து கொளஞ்சி சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது கரோனா காரணமாக சொந்த ஊர் திரும்பிய செல்லத்துரைக்கும் கொளஞ்சிக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது.

இதை கொளஞ்சியின் இளைய சகோதரி மகனான ராஜதுரை மற்றும் உறவினர்களான அன்ப ழகன், முருகேசன் ஆகியோர் கண்டித்தனர். ஆனாலும் கொளஞ்சி, செல்லத்துரையை தொடர்ந்து சந்திந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கொளஞ்சியும், செல்லத்துரையும் சந்திப்பதை கண்ட ராஜதுரை டிராக்டர் ஓட்டி வந்து இருவர் மீதும்ஏற்றி கொலை செய்தார்.

பின்னர் அவர் திட்டக்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது, கொளஞ்சி பெயரில் உள்ள சொத்துகளை செல்லத்துரை பறிக்க திட்டமிட்டதாகவும், அதனால் இருவரையும் ராஜதுரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்துஆவினன்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT