க்ரைம்

கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து 6.62 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜாவில் இருந்து நேற்று காலை கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தில் வந்த பயணிகளில் சந்தேகத்தின் பேரில் 11 பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

அவர்களது பேண்ட், சட்டை பாக்கெட்டுகளில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மொத்தம் 6.62 கிலோ எடையுஉள்ள ரூ.3.8 கோடி மதிப்பிலான கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த பயணி அர்ஜூனன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT