க்ரைம்

வடமாநில தொழிலாளர் குறித்து தவறான தகவல் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், பிஹார் மாநில தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்களை கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, எஸ்பி மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தினார். விசாரணையில், சுபம் சுக்லா என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த தவறான கருத்தைப் பதிவிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT