க்ரைம்

கிருஷ்ணகிரி | கூட்டுறவு சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல்: நிர்வாக குழு உறுப்பினர் கைது

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்த வழக்கில், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு பெண் உறுப்பினரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2019-ல் ரூ.30 லட்சம் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அப்போதைய கூட்டுறவுத் துறை சரக துணைப் பதிவாளர் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, கூட்டுறவுச் சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் கால்வேஹள்ளியைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திராணி (45) என்பவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT