புதுவை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் வளர்த்து வந்த ஆமைகள். 
க்ரைம்

புதுவை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆமைகள் வளர்த்த சமூக விரோதிகள்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியி ருப்பு குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் போட்டிருந்த இரு ஆமைகளை தொகுதி எம்எல்ஏ புகாரின் பேரில் போலீஸார் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டை கோவிந்த சாலை அந்தோணியார் கோயில் தெருவில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப் புகள் உள்ளன. இங்கு ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் தொட்டியில், சில சமூக விரோதிகள் ஆமை களை உயிருடன் இட்டு குடிநீரை அசுத்தம் செய்துள்ளதாக அத்தொகுதி எம்எல்ஏ நேரு வுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எம்எல்ஏஅங்கு சென்று பார்த்தார். பெரியக்கடை போலீஸாரையும் அங்கு அழைத்தார். அதைத்தொடர்ந்து உயிருடன் இருந்த இரு ஆமை களையும் போலீஸார் எடுத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நேரு எம்எல்ஏ கூறுகையில், "சில சமூக விரோதிகள் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் அமர்ந்து கொண்டு இரவு நேரங்களில் போதைப் பொருட்களை உபயோகிப் பதும், சில விரும்பத்தகாத சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேல்தளத்துக்கு யாரும் வராமல் இருக்க பூட்டினாலும் உடைத்து விடுகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகாரும் அளித்துள்ளேன். குற்றவாளிகளை கண்டுபிடித்து உடன் கைது செய்வதாகவும், இனி முழுமையாக கண்காணிப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, "குடிநீ்ர்தொட்டியில் 3 மாதங்களாக ஆமை போட்டுள் ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்"என்றனர்.

SCROLL FOR NEXT