க்ரைம்

சென்னை | ‘ஆபரேஷன் பிடியாணை’ 48 மணி நேரத்தில் 1,000 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை; தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிப். 28 முதல் மார்ச் 9-ம் தேதி வரை 10 நாட்கள் ஆபரேஷன் பிடியாணை என்ற நடவடிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார்.

நிலுவையிலுள்ள அனைத்து நீதிமன்ற பிடியாணைகளையும் நிறைவேற்றுமாறு அனைத்துமாநகர காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி கடந்த 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 1,004 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT