வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அணைக்கட்டு அரசு மருத்துவ மனைக்கு அவரை அழைத்துச் சென்று பரிசோதித்த போது 4 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து, மாணவியை விசாரித்தபோது உறவினரான ராஜேந்திரன் (37) என்பவர் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில், உதவி ஆய்வாளர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரியான ராஜேந்திரனை நேற்று கைது செய்தார்.