க்ரைம்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: விக்கிரவாண்டி பகுதியில் 18 பேரிடம் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர், அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவரும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த, அதே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயதுடைய மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 25-ம் தேதி இரவு 8 மணி அளவில் இருவரும் பைக்கில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரில் ஒருவர், திடீரென தான் வைத்திருந்த கத்தியால் மாணவரை சரமாரியாக குத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின், அம்மாணவியை 3 பேரில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவர்களின் இரு செல்போன்கள், நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸார் இருவரையும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து டிஐஜி பாண் டியன், எஸ்பி ஸ்ரீநாதா, டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் விக்கிரவாண்டி போலீஸார், மாணவி மற்றும் மாண வரிடம் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக போக்சோ சட்டப்பிரிவு உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 8 தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் நீண்டநேரம் இருந்த மொபைல் எண்க ளைக் கொண்டு, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ள 18 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை முடிந்து அவர்களை அனுப்பி வைத்த போலீஸார், இவர்களில் ஒருவரின் மொபைல்எண் தொடர்ந்து அணைக்கப்பட்டுள்ளதால் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, குற்றவாளியை நெருங்கி விட்டோம். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT