க்ரைம்

அன்னூரில் ஒரே நாளில் 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

அன்னூர்: அன்னூர் வட்டாரத்துக்குட்பட்ட சில இடங்களில் குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அன்னூர் வட்டார சமூக நலத்துறை அதிகாரிகள், சைல்டு லைன் நிர்வாகிகள், அன்னூர் போலீஸார் ஆகியோர் அடங்கிய குழுவினர் காரேகவுண்டன்பாளையம், அச்சம்பாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், சொந்தாம்பாளையம், கஞ்சம்பள்ளி, அல்லிகுளம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 4 இடங்களில் 14 வயது, 15 வயது, 16 வயது , 17 வயதுடைய சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணம் நடக்கவிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சமூகநலத் துறை அதிகாரிகள், போலீஸாரு டன் இணைந்து குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். குழந்தைத் திருமணம் நடத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பெற்றோருக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT