க்ரைம்

சென்னை | ஆட்டோவில் சென்று வழிப்பறி செய்த 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, பெருங்குடி, கெனால்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு(37). தனியார் நிறுவனம் ஒன்றில்பணியாற்றி வருகிறார். இவர் பணி முடிந்து பெருங்குடி, எஸ்டேட் 2-வது பிரதான சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 4 பேர்கும்பல் வேலுவை வழிமறித்து,கத்தியைக் காட்டி மிரட்டியது. பின்னர் வேலுவை தாக்கி பணம்,செல்போன், நகையை பறித்துவிட்டு தப்பியது.

அதிர்ச்சி அடைந்த வேலு இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாக வைத்து துப்புதுலக்கினர். இதில்,வழிப்பறியில் ஈடுபட்டது சவுகார்பேட்டை பரத்(25) (ஆட்டோ ஓட்டுநர்), துரைப்பாக்கம் கண்ணகிநகர் கார்த்திகேயன்(23), அதேபகுதி வினித்குமார்(22), பழையவண்ணாரப்பேட்டை சக்திவேல் (25) என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பரத், கார்த்திகேயன், வினித்குமார் ஆகியோர் உறவினர்கள் என்பதும், வினித்குமார் மீது 6 திருட்டு வழக்குகள், 3 வழிப்பறி வழக்குகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT