க்ரைம்

பொறியாளரை அரிவாளால் வெட்டியதால் கைதான இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த நெய்தலூர் காலனி சின்ன கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பொறியாளர் ராஜேஷ்(30). இவரை, ஜன.16-ம் தேதி அரிவாளால் வெட்டியதாக திருச்சி மாவட்டம் கொடியாலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற துரைசாமி(28), சேப்பலாபட்டி லட்சுமணன், நெய்தலூர் காலனி குருணிக்காரத் தெரு கந்தன் என்ற விக்கி, மணிவேல் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களில் துரைசாமி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பரிந்துரையின்பேரில், துரைசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் த.பிரபு சங்கர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் குளித்தலை போலீஸார் நேற்று முன்தினம் வழங்கினர். இதையடுத்து, துரைசாமி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT