சென்னை: சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இக்குடியிருப்பில் உள்ள 5 வீடுகளின் பூட்டைத் திறந்து சுமார் 25 பவுன் நகை, பணம் திருடுபோனது.
எழும்பூர் போலீஸார் முதல் கட்டமாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், அதே குடியிருப்பில் வசிக்கும் போலீஸாரின் மகனான நந்தகோபால் (22) என்ற பட்டதாரி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடமிருந்து நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.