க்ரைம்

ராமேசுவரம் | அகதி போல தனுஷ்கோடிக்கு வந்த போதைப்பொருள் கடத்தல் இளைஞர் கைது

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கை மன்னார் மாவட்டம், தோட்டவெளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (57). கடந்த சனிக்கிழமை இலங்கையிலிருந்து தனது மகன் சிந்துஜன் (22) உடன் புறப்பட்டு படகில் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் வந்தார்.

பின்னர் ராமேசுவரத்திலிருந்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அகதிகள் முகாமில் உள்ள உறவின ரின் அறிவுறுத்தலின்படி, செல்வராஜ், ராமேசுவரம் டவுன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீஸார் விசா ரணை நடத்தி, அவரை மண்டபம் முகாமில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், சிந்துஜனை மண்டபம் போலீஸார் நேற்று விசாரித்தபோது, அவர் மீது இலங்கையில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு, வவுனியா நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றபோது தப்பி, அங்கிருந்து தனுஷ்கோடிக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிந்துஜனை பாஸ்போர்ட் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மண்டபம் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT