க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த 2 ஆண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கொண்டு வந்த பார்சல்களை பிரித்துப் பார்த்த போது, அதில் ரூ.43.16 லட்சம் மதிப்புள்ள 860 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், கொழும்பில் இருந்து வந்த 3 ஆண் பயணிகளிடம் ரூ.51.19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 20 கிராம் தங்கம்,துபாயில் இருந்து வந்த 3 ஆண் பயணிகளிடம் இருந்து ரூ.1.07 கோடி மதிப்புள்ள 2 கிலோ 148 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT