திருவள்ளூர் மாவட்டம், இருளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த குட்டுசஹானி(27) பணியாற்றி வந்தார். இவருடன் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துவாரிக்கா பஹர் (33), தன்மனைவி சுமிதா பஹர்(21), குழந்தைகள் சிவா பஹர்(4), ரீமா பஹர்(1) ஆகியோருடன் இருளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தார்.
சுமிதா பஹருக்கும், குட்டுசஹானிக்கும் இடையே தவறான நட்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை துவாரிக்கா பஹர் பலமுறை கண்டித்துள்ளார்.
இச்சூழலில், கடந்த 7-ம் தேதி குட்டுசஹானி வீட்டுக்கு சுமிதா பஹர் சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இரு குழந்தைகள், சுமிதா பஹரை கொலை செய்துவிட்டு குட்டுசஹானி தப்பிச் சென்றார்.
சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த குட்டுசஹானியை கைது செய்தனர்.