க்ரைம்

சென்னை | பள்ளி, கல்லூரி அருகே குட்கா விற்ற 29 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் போலீஸார் நேற்று முன்தினம் குட்கா புகையிலை, லாட்டரி விற்பனை தொடர்பாக சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2.35 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்கள் மற்றும் 542 சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதர இடங்களில் குட்கா மற்றும் மாவா பாக்கெட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 2.022 கிலோ குட்கா மற்றும் மாவா பாக்கெட்கள், 227 சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த ஒருநாள் சிறப்பு சோதனையில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டு, 4.372 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்கள், 769 சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT