கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், 9 மாத குழந்தை உயிரிழந்தது. பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விவசாயி முரளி (34). இவர் நேற்று தனது மனைவி வேள்வி மற்றும் 9 மாத குழந்தை சித்தார்த் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரைக்குச் சென்று கொண்டிருந்தார் ஜண்டாமேடு அருகே சென்றபோது, அவ்வழியாக வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே சித்தார்த் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முரளி, வேள்வி ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.