தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாதாபட்டணத்தில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு பணிபுரிந்த ஆசிரியர் அருள்செல்வன் (51), மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, அருள்செல்வனை கைது செய்தனர்.
இதேபோல, சிவகிரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பாலசுப்பிரமணியன்(47), மாணவிகளிடம் பாலியல் ரீதியாகவும், இரட்டை அர்த்தங்களிலும் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.