க்ரைம்

சென்னை | வாடகைக்கு வீடு கேட்பதுபோல நடித்து மூதாட்டியை மிரட்டி நகை பறித்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கல் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் சொர்ணத்தாய் (73). தனியாக வசித்து வரும் இவர், தனது வீட்டில் உள்ள ஒரு பகுதியை வாடகைக்கு விடுவதாக அறிவிப்பு பலகை வைத்திருந்தார். கடந்த 31-ம் தேதி 2 இளைஞர்கள் வந்து, மூதாட்டியிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டனர்.

அவரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வீட்டில் வேறுயாரும் இல்லை என்பதை இளைஞர்கள் உறுதி செய்துகொண்டனர். பின்னர் இருவரும் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சி அடைந்த சொர்ணத்தாய், இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு துப்பு துலக்கினர்.

அப்போது, மூதாட்டியை மிரட்டி நகையை பறித்து தப்பியது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (31), அவரது கூட்டாளி அஜித் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT