காரைக்குடி: காரைக்குடி அருகே பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட புகாரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியின் நண்பர்கள் அரியக்குடியைச் சேர்ந்த பசுபதி (22), தேவகோட்டையைச் சேர்ந்த பாலகணேசன் (19). இவர்கள் இருவரும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி பிப்ரவரி 2ம் தேதி விஷம் அருந்தி ஆபத்தான நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின்பேரில், காரைக்குடி தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து பசுபதி, பாலகணேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.