க்ரைம்

திருச்சி | வீட்டில் ஆள் இருந்தபோதே 63 பவுன் நகைகள் திருட்டு

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி கன்டோன்மென்ட் வஉசி தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் முகமது சம்சுதீன் மனைவி பேச்சி முத்து ஜெகரா (62).

இவர், டிச.19-ம் தேதி தில்லை நகரில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருந்து 63 பவுன் நகைகளை எடுத்து வந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்தார். பின்னர், பிப்.2-ம் தேதி நகைகளை அம்மா வீட்டுக்குக் கொண்டு செல்வதற்காக பீரோவிலிருந்து எடுத்து ஹாலில் இருந்த டேபிள் மீது வைத்துள்ளார். அந்த நேரத்தில், அவரது சகோதரி சர்புனிசா வீட்டுக்கு வந்ததால், அவரை தனது அறைக்கு அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசியுள்ளார்.

சர்புனிசா அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிறகு, டேபிளில் பார்த்தபோது நகைகளைக் காணவில்லை. இதுகுறித்து பேச்சிமுத்து ஜெகரா அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT