க்ரைம்

குமுளியில் 7 வயது மகனுக்கு சூடு வைத்த தாயார் கைது

செய்திப்பிரிவு

குமுளி: தமிழக கேரள எல்லையான குமுளி அட்டப்பள்ளம் அருகே லட்சம் வீடு காலனி பகுதி உள்ளது. இங்கு 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் இருந்த டயரை எடுத்து வந்து எரித்துள்ளான்.

இதனால் கோபமடைந்த அவனது தாயார் மகனை அடித்ததுடன், தோசை கரண்டியை சூடுபடுத்தி கை மற்றும் கால்களில் சூடு வைத்துள்ளார். இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி காவல் ஆய்வாளர் ஜோபின் ஆண்டனி விசாரணை நடத்தி சிறார் நீதிச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் தாயாரை கைது செய்தார்.

SCROLL FOR NEXT