க்ரைம்

கரூரில் அதிமுக பிரமுகர் கொலை

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் முத்துராஜபுரத்தைச் சேர்ந்தவர் எஸ்.வடிவேல்(50). அதிமுககரூர் மாநகராட்சி 32-வது வார்டு செயலாளர். கடந்த ஓராண்டாக ராயனூரில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, ராயனூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வடிவேலுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடிவேலு நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.

போலீஸ் தரப்பில் தெரிவித்தது: வடிவேலுவின் நண்பரான பொய்கைபுதூரைச் சேர்ந்த மகாதேவன்(32) என்கிற ஆட்டோதேவனிடம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டு நேற்று முன்தினம் வடிவேலு போன் செய்துள்ளார். மகாதேவன் செல்போனை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் முத்துராஜபுரத்தில் டீ கடையில் நின்றிருந்த மகாதேவனிடம் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளார்.

இந்நிலையில், வடிவேலு கொல்லப்பட்டதை அடுத்து, மகாதேவன், அவரது சகோதரர் பாலா, நண்பர் சேகர் ஆகிய 3 பேர் மீது பசுபதிபாளையம் போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT