க்ரைம்

திருநெல்வேலி | பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் கைது

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியை அடுத்துள்ள மேலப்பாளையம் நத்தம் பகுதியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவிகள் 3 பேருக்கு பள்ளி தாளாளர் குதுபுதீன் நஜீம் (47) என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர். போலீஸார், வருவாய் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாணவிகளின் பெற்றோர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி தாளாளர் குதுபுதீன் நஜீமை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், தலைமை ஆசிரியர் காதரம்மாள், தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

SCROLL FOR NEXT