க்ரைம்

மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் மோதல்

செய்திப்பிரிவு

சென்னை: மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் மாநில கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு வரும் மாணவர்களிடையே ‘ரூட் தல’ பிரச்சினை உள்ளது. இதனால், மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பாக நேற்று மோதிக் கொண்டனர். குறிப்பாக மாணவர் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை கத்தியால் விரட்டி, விரட்டிதாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், காயமடைந்த இரு மாணவர்கள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT