திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அருகே மாற்றத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன்(27). இவர், அதே கிராமத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான 16 வயது சிறுமியை கடந்த 16-01-2018-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று(31-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.