க்ரைம்

ஓசூர் | பாஜக மாவட்ட செயலாளரை தாக்கிய விஎச்பி மாவட்ட தலைவர் கைது

செய்திப்பிரிவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜனப்பர் தெருவில் வசித்து வருபவர் தேவராஜ். இவர் விஸ்வ இந்து பரிஷத்தில் மாவட்ட தலைவராக உள்ளார். இவருடைய மனைவி மல்லிகா, ஓசூர் மாநகராட்சியின் 25-வது வார்டு உறுப்பினர். அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய உறவினர் பாபு, பாஜக கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக உள்ளார்.

அப்பகுதியில் புதியதாக அம்மன் கோயில் கட்ட தேவராஜ், பாபுவிடம் ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், தேவராஜ் மற்றும் அவரது சகோதரியின் மகன் கணேசன் ஆகிய இருவரும் சேர்ந்து பாபுவை பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த பாபு மருத்துவமனையில் சிகிச்சைபெறுகிறார். போலீஸார் தேவராஜ் மீது கொலை வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். கணேசனை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT