பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுடன் கடத்தலில் ஈடுபட்டு கைதான சரவணமணிகண்டன், கணேஷ்குமார், மஞ்சுநாத். 
க்ரைம்

விருதுநகர் | காரில் கடத்திவரப்பட்ட 259 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 259 கிலோ குட்கா பொருள்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே காரில் சிலர் குட்கா பொருள்கள் கடத்துவதாக ஆமத்தூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்து. அதையடுத்து ஆமத்தூர் அருகே உள்ள வெள்ளூர் சாலையில் சிதம்பராபுரம் விலக்கு அருகே இன்று காலை ஆமத்தூர் போலீஸார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்திச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, காரில் வந்த சாத்தூர் அருகே உள்ள நென்மேனியைச் சேர்ந்த சரவணமணிகண்டன் (34), விருதுநகர் அருகே துலுக்கப்பட்டியைச் சேர்ந்த கணேஷ்குமார் (33), பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சுநாத் (39) ஆகியோரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

மேலும், 25 மூட்டைகளில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.24 லட்சம் மதிப்பிலான 259 கிலோ குட்கா பொருள்கள், ரூ.1,43,750 ரொக்கப் பணம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தி கார், பைக் ஆகியவைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT