சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீஸார் தம்மம்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எட்டிமடத்து கருப்பசாமி கோயில் அருகில் நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 74 கிருஷ்ணாபுரம் கண்ணன் தெருவைச் சேர்ந்த சிவா (22) என்பதும், அனுமதியின்றி 2 நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிவாவை போலீஸார் கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.