தூத்துக்குடி: வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்திறங்கிய சரக்குப் பெட்டகங்களை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
அப்போது, துபாயில் இருந்து கால்நடைத் தீவனம் என்றும், சிங்கப்பூரில் இருந்து பார்லி அரிசி என்றும் குறிப்பிடப்பட்டு, வந்த 2 சரக்கு பெட்டகங்களை சோதனை செய்தபோது அவற்றில் மொத்தம் 23 டன் கொட்டைப்பாக்குகள் இருந்தன.
கொட்டைப்பாக்கு இறக்கு மதிக்கு இந்திய அரசு தடை விதிக்கவில்லை என்றாலும், 100 சதவீதம் வரி செலுத்தி கொண்டு வர வேண்டும். இதனால் வரி ஏய்ப்புக் காக வேறு பொருட்களின் பெயரை குறிப்பிட்டு கொட்டைப்பாக்கு களை ஏமாற்றி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3.5 கோடி. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாக்குகளை இறக்குமதி செய்த சென்னையை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.