க்ரைம்

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சேலம் மத்திய சிறை வார்டன்கள் இருவர் கைது

செய்திப்பிரிவு

சேலம்: சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு சேலம் சிறை முன்பாக இளம்பெண் நின்றிருந்தபோது, மத்திய சிறை வார்டன் அருண்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருணுடன் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். அவரை காதலிப்பதாக அருண் கூறி சிறை குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரது நண்பரான மற்றொரு வார்டன் சிவசங்கர் (30) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இதையடுத்து, சேலம் மத்திய சிறை வார்டன்கள் அருண், சிவங்சங்கர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்றனர்.

SCROLL FOR NEXT