க்ரைம்

திருப்பூர் | தவறான உறவால் நண்பர் கொலை - விசாரணைக்கு அஞ்சி மற்றொருவர் தற்கொலை

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள தங்கும் விடுதியின் அறையில் இருந்து கடந்த 7-ம் தேதி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து விடுதி நிர்வாகத்தினர் திறந்து பார்த்தபோது, இளைஞர் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து தெற்கு போலீஸார் விசாரித்தனர். கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில், திருப்பூர் கருவம்பாளையம் புளியமரத் தோட்டத்தை சேர்ந்த வினோத் குமார் (26) என்பதும், அவருடன் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன் (26) என்ற கல்லூரி கால நண்பர் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் விடுதியில் கடந்த 4-ம் தேதி தங்கியிருந்தவர்களிடையே தகராறு எழுந்துள்ளது. இதையடுத்து, வினோத்குமாரை கொலை செய்துவிட்டு கரூருக்கு கதிரேசன் சென்றுள்ளார். அங்கு, போலீஸார் விசாரணைக்கு அஞ்சி 7-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக தெற்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT