மதுரை: மேலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம், மேலூர் அருகிலுள்ள கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராமன் என்பவர் நெருங்கி பழகியுள்ளார். மேலும் ஆசை வார்த்தை கூறி, அவரை மேலூர் அருகிலுள்ள கீழவளவு பகுதிக்கு கடந்த 9-ம் தேதிஅழைத்துச் சென்று பாலியல் தொல்லைகொடுத்துள்ளார்.
மேலும் அவர் அணிந்திருந்த நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து புகாரின்பேரில், சிவ ராமன் (21) மற்றும் உடந்தையாக இருந்தஉத்தங்குடி வினோத்குமார் (19), மேலவளவு விஜயகுமார் (27) ஆகிய 3 பேரை யும் புதூர் போலீஸார் போக்சோவில் கைது செய்தனர்.