திருவண்ணாமலையில் காவல்துறையை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
க்ரைம்

வழிப்பறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து தி.மலையில் பொதுமக்கள் சாலை மறியல்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கல்நகர் மயானம் அருகே கஞ்சா போதை யில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் உள்ள மயானம் அருகே செல்லும் பொதுமக்களை வழிமறித்து கொள்ளை சம்ப வங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறையிடம் முறையிட்டும் நட வடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், மயானம் அருகே நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய முகல்புறா தெருவில் வசிக்கும் நசீர், முன்னா ஆகியோரை தாக்கி, பணம் மற்றும் செல்போன்களை 4 பேர் கொண்ட கும்பல் பறித்துள்ளதாக தெரிகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள முகல்புறா தெரு, நபிகள் நாயக தெரு மற்றும் கம்மங்கொல்லை தெருவில் வசிக்கும் பொதுமக்கள், கோபால் தெருவில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “கல்நகர் மயான பகுதியில் கஞ்சாவை உட்கொண்டு, அவ்வழியாக செல்பவர்களை தாக்கி, ஒரு கும்பல் வழிப்பறியில் ஈடுபடுகிறது. மேலும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை. இதில் பொதுமக்களாகிய நாங்கள், தினசரி பாதிக்கப்பட்டு வருகிறோம். காவல்துறையிடம் முறையிட்டும் பலனில்லை. உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.

இதன் எதிரொலியாக, வழிப் பறியில் ஈடுபடும் கஞ்சா கும்பல் சுதந்திரமாக சுற்றி வருகிறது. மேலும், அவர்களது வழிப்பறி கொள்ளைகள், தினசரி அதிகரித் துள்ளன. கல்நகர் மயானம் வழியாக நேற்று (நேற்று முன் தினம் இரவு) வந்த 2 பேரை வழி மறித்து தாக்கி, பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இவர்களில், ஒருவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள் ளோம். அவரிடம் தீவிர விசா ரணையை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்காமல், காவல்துறையினர் அமைதி காக்கின்றனர். கஞ்சா போதையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தி.மலை நகர காவல் ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், வழிப்பறி கொள்ளை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த மறியல் முடிவுக்கு வந்தது. வழிப்பறி கொள்ளை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர்.

SCROLL FOR NEXT