க்ரைம்

திண்டுக்கல் | 43 பவுன் நகை கொள்ளை வழக்கில் 8 பேர் கைது

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த சீனிவாசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

டிச.25-ம் தேதி சீனிவாசன் வெளியில் சென்றிருந்த நிலையில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து கலையரசியை மிரட்டி 43 பவுன் நகை மற்றும் ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது. கலையரசி வைத்திருந்த மொபைல் போனையும் கும்பல் பறித்துச் சென்றது.

சம்பவம் குறித்து விசாரிக்க, டிஎஸ்பிகள் கோகுலகிருஷ்ணன் (திண்டுக்கல்), துர்காதேவி (வேடசந்தூர்) தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட ஓசூர் ரகு(35), பெரம்பலூர் செல்வக்குமார்(48), உசிலம்பட்டி சிராஜூதீன்(34), ஜோதி(36), திருச்சி பொன்மலை தீனதயாளன்(30), சென்னை பாஸ்கர்(36), பெங்களூரு சுரேஷ்(28), சதீஷ்(38) ஆகிய 8 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.1.50 லட்சம், 21 பவுன் மீட்கப்பட்டன.

SCROLL FOR NEXT