கடலூர்: சிதம்பரம் அருகே கிள்ளையில் பள்ளி ஒன்றில் 5-ம் படித்து வரும் 10 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் ஒரு வீட்டிற்குச் சென்று டியூசன் படித்து வருகிறார். டியூசன் சொல்லித் தரும் பெண்ணின் தந்தையான, தீயணைப்புத் துறையில் இருந்து ஒய்வு பெற்ற தர்மலிங்கம் ( 65), என்பவர், அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று அவரது தாயாரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். தர்மலிங்கம் வீட்டுக்கு சென்ற போது தகவலறிந்த அவர் ஓடிவிட்டார். போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.