க்ரைம்

மதுரையில் பிரபல வர்த்தக நிறுவனத்தில் நகை விற்பனையில் மோசடி - 2 ஊழியர்கள் சிக்கினர்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மேலூர் மெயின் ரோட்டில் செயல்படும் பிரபல வர்த்தக நிறு வனத்தில் நகைக்கடை பிரிவில் அருள் என்பவர் பொற் கொல்லராகவும், பொன்ராஜ் விற்பனையாளராகவும் பணிபுரிந்தனர். கடந்த 28-ம் தேதி நெல்லை கொட்டாரன் குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் வர்த்தக நிறுவனத்துக்கு வந்தார்.

அவர், தனது 25 பவுன் பழைய நகைகளை விற்றுள்ளார். 18 காரட் மதிப் புள்ள அவரது நகைகளை 22 காரட் மதிப்பிலானது எனக் கூடுதலாக மதிப்பீடு செய்து பொன்ராஜ், அருள் ஆகியோர் வாங்கினர். இதன் மூலம் அவர்கள் ரூ.3.36 லட்சம் இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவந்தது.

வர்த்தக நிறுவன மேலாளர் ராஜேஷ்குமார் மாட்டுத் தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொன்ராஜ், அருள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT