க்ரைம்

மீஞ்சூர் அருகே ஊராட்சி துணை தலைவரை தாக்கிய 5 பேர் கைது

செய்திப்பிரிவு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை ஊராட்சி துணைத் தலைவராக இருக்கும் ஹரிகிருஷ்ணன், தற்போது ஊராட்சி தலைவரின் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இவர், கொண்டக்கரை அருகே உள்ள கவுண்டர்பாளையம் பகுதியில், அனல்மின் நிலையம் ஒன்றின் நிலக்கரி சாம்பல் கழிவை அகற்றும் பணியை ஒப்பந்தமுறையில் மேற்கொண்டு வருகிறார். இச்சூழலில், நேற்று முன்தினம் கும்பல் ஒன்று ஹரி கிருஷ்ணனை தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் அவர் காயமடைந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், நிலக்கரி சாம்பல் கழிவை அகற்றும் பணிக்காக ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஹரி கிருஷ்ணன் மீது தாக்குதல் நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து தாக்குதல் தொடர்பாக, சென்னை திருவொற்றியூர், தண்டையார்பேட்டை மற்றும் எடப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த ரமேஷ், தணிகாசலம், துரை, மூர்த்தி மற்றும் சங்கர் ஆகிய 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT