கோவை எஸ்பி பத்ரி நாராயணன் | கோப்புப் படம் 
க்ரைம்

கோவை | கடந்த ஓராண்டில் திருடுபோன ரூ.3.63 கோடி மதிப்பிலான நகை, பணம் மீட்பு

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைந்த, திருடுபோன செல்போன்களை மீட்டு, அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமை வகித்து, மொத்தம் ரூ.24.95 லட்சம் மதிப்பிலான 146 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

அதன்பின் அவர் கூறியதாவது: கடந்த ஓராண்டில் ரூ.3.63 கோடி மதிப்பிலான நகை, பணம், பொருட்கள் மீட்கப்பட்டன. புகையிலை பொருட்கள் விற்றது தொடர்பாக 1,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,444 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, என்றார்.

SCROLL FOR NEXT