க்ரைம்

திருப்பூர் | சரக்கு வாகனம் மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம்சவுடாம்பிகை நகரை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன் (19), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

காங்கயம் - திருப்பூர் சாலையில் நேற்று முன்தினம் இருசக்கரவாகனத்தில் அமிர்தவாசன் சென்றபோது, நீலக்காட்டுப்புதூர் பிரிவுஅருகே சாலையில் திரும்பியசரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அமிர்தவாசன், உயிரிழந்தார். இதுகுறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவிகேமராவில் இந்த விபத்து தெளிவாக பதிவாகி இருந்தது. அதில், சாலை பிரிவில் திரும்பிய சரக்கு வாகனம் மீது, மின்னல் வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதும் காட்சிகள்பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

SCROLL FOR NEXT