சாத்தூர்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக தனியார் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா(26). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபு ரிகிறார். இவருக்கும், சாத்தூர் அருகே வல்லம்பட்டியைச் சேர்ந்த ஜான்சிராணி(20) என்பவருக்கும் கடந்த மார்ச்சில் திருமணம் நடந்தது.
திருவண்ணாமலையில் சிக்கினார்: இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மனைவியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை வாங்கிக் கொண்டு, வெளியூர் வேலைக்குச் செல்வதாகக் கூறி கார்த்திக்ராஜா சென்றார். பின்னர் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இது குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் மனைவி ஜான்சிராணி புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், உதவி ஆய்வாளர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் தலை மையிலான தனிப்படை போலீஸார் கார்த்திக்ராஜாவை தீவிரமாகத் தேடி வந்தனர். விசாரணையில், அவர் திருவண்ணாமலையில் இருப்பதாக கிடைத்த தகவலை யடுத்து அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
80 பவுன் அபகரிப்பு: அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில், அவர் பல்வேறு ஊர்களில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், அவர்களிடம் இருந்து 80 பவுன் நகைகளுக்கு மேல் அபகரித்ததும் தெரிய வந்தது. இதில் ஜான்சிராணியிடம் இருந்து அபகரித்த 5 பவுன் நகையை மட்டும் போலீஸார் மீட் டனர். மேலும் அவர் மீது கோவை, சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, விழுப்புரம் உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்களை ஏமாற்றிய வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. அதையடுத்து கார்த்திக் ராஜாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.