கரூர்: கரூர் மாவட்டம் தரகம்பாடி அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(60). இவர், 16 வயது சிறுமியை கடந்த 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து சிறுமியிடம் அவர் நடத்திய விசாரணையில், பெரியசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இடும்பன்(31), சஞ்சீவ்(20) ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், குழந்தை பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.