க்ரைம்

மேலூர் அருகே நிலப் பிரச்சினையில் மதுரை டிராவல்ஸ் உரிமையாளர் கொலை

செய்திப்பிரிவு

மதுரை: மேலூர் அருகே நிலப் பிரச்சினையில் மதுரை டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(45). இவர் அப்பகுதியில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மேலவளவு அருகே உள்ள சாம்பிராணிபட்டியில் தோட்டம் உள்ளது. இவருக்கும், சாம்பிராணிபட்டியைச் சேர்ந்த கோபாலகி ருஷ்ணன், கார்மேகம் ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்சினையில் முன்விரோதம் இருந்தது.

சுரேஷ் நேற்று முன்தினம் தனது தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பியபோது, அவரை வழி மறித்த கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இது தொடர்பாக மேலவளவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி நடத்திய விசாரணையில், நிலப்பிரச்சினையில் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப் பட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன், கார்மேகம்(45), அஜித்பாலன், ராமர், அவரது மனைவி பாண்டிச்செல்வி, மலைச்சாமி, திருமலை, அழகம்மாள் உட்பட 9 பேரை டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர். கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே ரவுடி பட்டியலில் இருந்தவர் எனப் போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT