கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேரந்தவர் பீர் முகமது(45). இவர் சுந்தராபுரம் எல்ஐசி காலனியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று முன்தினம் மது அருந்த சென்றார்.
பணம் கொடுக்காமல் இலவசமாக மதுபானம் கேட்டதால் ஊழியர்கள் மறுத்துள்ளனர். ஆத்திரமடைந்த பீர்முகமது சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சுந்தராபுரம் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மதுக்கடையில் போலீஸார் சோதனை நடத்தியபோது, வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, பீர்முகமதுவை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கெனவே மூன்று முறை போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது.