க்ரைம்

ஆனைகட்டி பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக மேலும் 6 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவை ஆனைகட்டி பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டதாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பசுமணி கிராமத்தில் கஞ்சா செடி பயிரிட்டதாக 4 பேரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்தனர். அப்பகுதியில் மாவட்ட காவல்துறையினருடன், நக்சல் தடுப்புப் பிரிவு காவலர்கள், பெரியநாயக்கன்பாளையம் சரக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர், வனத்துறையினர் கூட்டாக இணைந்து சோதனை பணிகளை தீவிரப்படுத்தினர்.

அதில், ஆனைகட்டியில் உள்ள துமனூர் கிராமத்தில் கஞ்சா செடிகளை வளர்த்ததாக ராமன் (62), பெருமாள் (57), ரங்கராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 17 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

அதே போல குஞ்சூர்பதி கிராமத்தில் நஞ்சன்(50), அவரது மனைவி மலர்கொடி (45), மகன் அருண்குமார் (25) ஆகியோர் சேர்ந்து வீட்டுக்கு பின்னால் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீஸார் 6 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT