க்ரைம்

சென்னை | குட்கா விற்பனை செய்த 28 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக சென்னையில் ஒரே வாரத்தில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது, பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தொடர்புடைய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘‘சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT