சென்னை: சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, வெளிநாட்டு பெண் ஒருவரின் வயிற்றில் 90 கேப்சூல்கள் இருந்தன.
அவற்றை வெளியே எடுத்து பார்த்தபோது, ரூ.6.31 கோடி மதிப்பிலான 902 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.
இதேபோல, துபாயில் இருந்து வந்த 2 ஆண் பயணிகளிடம் ரூ.1.93 கோடி மதிப்பிலான தங்கம், அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் ரூ.54 லட்சம்மதிப்பிலான தங்கம், துபாயில் இருந்து வந்த மற்ற 2 பயணிகளிடம் ரூ.47.99 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.