க்ரைம்

கீரமங்கலம் காவல் நிலைய காவலர் திருமணமான 4 மாதங்களில் தற்கொலை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள அரசர்குளம் கீழ்பாதியைச் சேர்ந்தவர் டி.தமிழ்செல்வன்(30). இவர், கடந்த 4 ஆண்டுகளாக காவல் துறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில தினங்களாக தமிழ்செல்வன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய தமிழ்செல்வன், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT